மதுபோதையில் வாகனம் செலுத்திய 758 பேர் கடந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரதி பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப்பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
புத்தாண்டு காலப்பகுதி நிறைவடையும்வரை வீதிகளில் பயணிக்கும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
சாரதிகள், கவனயீனமற்ற முறையிலும், அதிக வேகத்துடனும், மதுபோதையிலும் வாகனங்களை செலுத்துகின்றமை தொடர்பில் கண்காணிக்கப்படுகிறது.
குறிப்பாக மதுபோதையில் அல்லது போதைப்பொருளை பயன்படுத்தியவாறு, வாகனத்தை செலுத்திய நிலையில் கைதுசெய்யப்படும் சாரதிகளுக்கு, பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது.
அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதுடன், குறித்த வாகனமும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்படும் எனவும் அவர் கூறினார்.










