மதுரை ஆதினத்தின் மறைவு சைவ சமயத்திற்கு பேரிழப்பு – செந்தில் தொண்டமான் இரங்கல்

சைவ சமயத்திற்காகவும், சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கவும் தன்னை அர்ப்பணித்த மதுரை ஆதினம் அவர்களின் மறைவு செய்தி வேதனையளிக்க கூடிய ஒன்றாகும் என பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான  செந்தில் தொண்டமான் தனது  இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும்,கடந்த 20 வருடங்களாக எனக்கு அவருடன்  பழகக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது    என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.அவருடனான ஒவ்வொரு சந்திப்பின் போதும் பல்வேறு பட்ட ஆன்மீக சிந்தனைகளை கூறுவார். அவரிடம் கேட்கப்படும் ஒவ்வொரு ஆன்மீக ரீதியான கேள்விகளுக்கும் எளிதாக விளங்கிக் கொள்ள கூடிய வகையில் பதிலளிப்பார். அவருடைய மறைவு எனக்கு துயரமளிக்கின்றது .
தமிழகத்தில் தொன்மையான புகழ்பெற்ற மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் சுவாமிகள் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது.
77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சுவாசக் கோளாறு காரணமாக அவருக்கு  சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்த பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் நேற்றைய தினம்  சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவர் தமிழ் பக்தி இலக்கியங்களை பரப்புவதில் பெருந்தொண்டு ஆற்றியவர். உலக மதங்கள் குறித்தான தெளிவான பார்வை உடையவர் இவருடைய இழப்பு ஆன்மீக துறைக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்.
மதுரை ஆதீன மடம்,அவருடைய சீடர்கள்  அவருடைய ஆன்மீக கொள்கைகளையும், சமூக நல்லிணக்க பணிகளையும் தொடர்ந்து அவர் விட்டு சென்ற வழியில் கொண்டு செல்ல வேண்டும் .
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.

Related Articles

Latest Articles