‘மத்திய மாகாணத்தில் 759 பேருக்கு டெங்கு’

மத்திய மாகாணத்தில் கடந்த 09 மாதங்களில் 759 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் கண்டி,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையிலான கடந்த 09 மாதங்களில் 759 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கடந்த 09 மாதங்களில் ஜனவரி மாதம் கண்டி மாவட்டத்தில் 67 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 12 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 5 பேரும் பதிவாகியுள்ளனர். பெப்ரவரி மாதம் கண்டி மாவட்டத்தில் 48 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 05 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 1 ஒருவரும் பதிவாகியுள்ளனர்.

மார்ச் மாதம் கண்டிமாவட்டத்தில் 51 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 11 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 08 பேரும் பதிவாகியுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கண்டி மாவட்டத்தில் 90 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 09 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 09 பேரும் பதிவாகியுள்ளனர்.

மே மாதம் கண்டி மாவட்டத்தில் 37 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 06 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 04 பேரும் பதிவாகியுள்ளனர். யூன் மாதம் கண்டி மாவட்டத்தில் 40 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 17 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 04 பேரும் பதிவாகியுள்ளனர். யூலை மாதம் கண்டி மாவட்டத்தில் 129 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 58 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 05 பேரும் பதிவாகியுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் கண்டி மாவட்டத்தில் 68 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 33 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 02 பேரும் பதிவாகியுள்ளனர். செப்டம்பர் மாதம் கண்டி மாவட்டத்தில் 32 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 06 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 03 பேரும் பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய மொத்தமாக கண்டிமாவட்டத்தில் 562 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 157 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 40 பேரும் பதிவாகியுள்ளனர். கடந்த 2020 ஆம் வருடத்தின் முதல் 09 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் முதல் 09 மாதங்களில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக மத்திய மாகாண சுகாதாரப் பிரிவு சுட்டிக் காட்டியுள்ளது.

2020 ஆம் ஆண்டு முதல் 09 மாத காலத்தில் கண்டி மாவட்டத்தில் 3069 டெங்கு நோயாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 557 டெங்கு நோயாளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 166 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles