மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மீது பாலியல் வன்கொடுமை! டடியன்சின் தோட்டத்தில் கொடூரம்!!

பொகவந்தலாவை- டியன்சின் தோட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரை தாக்கிவிட்டு தலைமறைவாகியிருந்த மூன்று சந்தேக நபர்களை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (18) இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மது போதையில் வந்த மூவர் குறித்த பெண்ணை தாக்கி அவரை துஷ்பிரயோகப்படுத்திற்கு உட்படுத்தி பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளனர். இந்தப் பெண் பலத்த காயங்களோடு 1990 என்ற அவசர அம்புலன்ஸ் வண்டியின் ஊடாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியின் அறிக்கை ஊடாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தை சேர்ந்த 49 வயது பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர், தொடர்ந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மூவரும் டியன்சின் தோட்டத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்ததுடன்,சந்தேக நபர்களை ஹற்றன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles