ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று உரையாற்றவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. இதில் உரையாற்றிய பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பீரிஸின் உரை அமையவுள்ளது. அத்துடன், இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமளிக்கப்படவுள்ளது.