மனித புதைகுழி குறித்த விசாரணைக்கு அரசு இடையூறு ஏற்படுத்தவில்லை

செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு அரசாங்கம் எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. மாறாக தேவையான ஒத்துழைப்புகளே வழங்கப்பட்டுவருகின்றன என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் நீதிமன்ற கண்காணிப்புடன் இடம்பெற்றுவருகின்றன. தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சில குழுக்களுடன் இணைந்து யாழ். மாநகரசபையில் இவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர். செம்மணி புதைகுழியில் உள்ள சில எலும்புக்கூடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்புடன் இணைந்துதான் இவர்கள் இப்படி ஆட்சியமைத்துள்ளனர்.

வடக்கில் தேசிய மக்கள் சக்திக்கே அதிக வாக்குகள் உள்ளன. நிச்சயம் நாம் நீதியை நிலைநாட்டுவோம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை எப்படியாவது மீள ஏற்படுத்துவதற்கு ராஜபக்சக்கள் முற்படுகின்றனர். வடக்கில் இவர்கள் முற்படுகின்றார்கள். அதனால்தான் ஏதேனும் ஒரு சம்பவத்தை தூக்கிப்பிடிக்கின்றனர்.

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைக்கு நாம் எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம்கூட ஒத்துழைப்பு கோரியுள்ளோம்.
தேசிய சமத்துவ அரசாங்கம் வந்துள்ளதால் இவர்கள் வடக்கில் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.” – என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles