மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு!

 

செம்மணி மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில், விரைவில் உண்மைகள் வெளிவரும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார் என தமிழ் மின்னிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதிமன்றங்களில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனவும், அதற்கு அரசாங்கம் ஒருபோதும் தடையாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles