வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் மரணம் தொடர்பில் அவரது கணவர் நேற்று (17) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, கமகொட பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, கமகொட பிரதேசத்தைச் சேர்ந்த நீலமுனி ரமணி சில்வா, கடந்த 12ஆம் திகதி பிற்பகல் தனது வீட்டில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, களுத்துறை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட உத்தரவின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மூச்சுத்திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
