மனைவியை கொலைசெய்த கணவர் கைது!

லுணுகலை – ஜனதாபுர , தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயாவில் இருந்து 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவர், தலைப் பகுதியில் காயமடைந்த நிலையில் நேற்று முன்தினம் (19) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து 17 வயதுடைய குறித்த பெண்ணின் மகள் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் விசாரணை வேட்டையை ஆரம்பித்தனர். இதன்போது 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் தலைமறைவாகி இருந்த 45 வயதுடைய குறித்த பெண்ணின் கணவர் நேற்று இரவு லுணுகலை நகரில் வைத்து லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின்போது சிறிய கல் ஒன்றினால் தலை பகுதியை தாக்கியதாகவும் பின்னர் பெரிய கல் ஒன்றினால் தாக்கி கொலை செய்ததாக சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையே மிக நீண்ட காலமாக குடும்ப தகராறு காணப்பட்டதாகவும் இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாகவும் பெண்ணின் வீட்டு பகுதிக்கு குறித்த நபர் செல்ல கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்த பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles