மனைவியை கொலைசெய்து கழிவறை குழியில் புதைத்த கணவன்

ரிதிமாலியத்தவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமது மனைவியை கொலைசெய்து உடலை இரகசியமாக புதைத்துவிட்டு அவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக கூறிவந்த கணவன் மற்றும் அவரது மகனை ரிதிமாலியத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரிதிமாலியத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் சுமார் இரண்டு வருடங்களாக காணாமல் போயுள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து அப் பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்போது அவர் வழங்கிய முரண்பாடான வாக்குமூலத்தால் பொலிஸார் அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தகராறொன்றின்போது தமது மனைவியை தாக்கி தாம் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அத்துடன் தானும் தமது மகனும் இணைந்து சடலத்தை கழிவறை குழியில் இட்டு மூடியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதோடு கொலை தொடர்பில் 72 வயதுடைய அவரது கணவரும், 26 வயதுடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மஹியங்கனை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் அப் பெண்ணின் சடலத்தை எதிர்வரும் ஒகஸ்ட் 10 ஆம் திகதி மீளத் தோண்டி எடுக்குமாறும் நீதிவான் உத்தரவிடுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles