மனோ யாரின் கைக்கூலி? அவரே வெளியிட்ட தகவல்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு,

வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு “விசித்திரமானது” என நேற்று மீண்டும் ஒருமுறை அறிந்து சிலிர்த்துக்கொண்டேன்.

“13ம் திருத்தம்” பற்றி வாயை திறந்தாலேயே, “இந்திய-மேற்குலக கைக்கூலி” என ஒரு கும்பல் தயவு தாட்சண்யமில்லாமல் கூறுகிறது.

நான் என்னை நம்பும் மக்களுக்கு தான் “கைக்கூலி”..!
இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா?

13 என்பது முழுமையான தீர்வென்றோ, அதுதான் இறுதி தீர்வென்றோ எம்மில் எவரும் ஒருபோதும் கருதவில்லை.
அரசு முகாமில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ்கூட 13ஐ முழுமையான இறுதி தீர்வு என கருதுகிறார் என நான் நினைக்கவில்லை.

அப்படி இருக்கையில், இதையும்கூட திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? இந்த அற்ப (Silly) விவாதத்தை கடந்து நாம் பயணிக்க முடியாதா?
13ஐ “ஆரம்ப புள்ளி” யாக கருதிதானே மாகாணசபை தேர்தல் வந்தால் வடக்கு கிழக்கில் சகல கட்சியினரும் போட்டி இடுகிறார்கள்?

ஆக, எந்தவொரு இறுதி தீர்வும், “இதையும் தாண்டி” தானே அமைய வேண்டும்?

இதைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல், எப்படி, அரசாங் கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது?

இதன் அடிப்படையில்தானே, இலங்கை வரும் ஒவ்வொரு இந்திய அரசு பிரதிநிதியுடனும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஆண்டாண்டு காலமாக பேசுகிறார்கள்?

அப்படியானால் இனிமேல், இத்தகைய இந்திய அரசுடனான பேச்சுகள் நிறுத்தப்பட போகின்றனவா?

மேலும் மாகாணசபை தேர்தல் பற்றிதானே ஐநா மனித உரிமை ஆணையம் உட்பட சர்வதேச நிறுவனங்களும் பேசுகின்றன?

“சமஷ்டி” தீர்வுகளை பெற தமிழருக்கு முழுமையான சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை பயன்படுத்தி, தமிழர்தாம் போராடி தீர்வுகளை பெற வேண்டும். உலகம் துணை பாத்திரம்தான் வகிக்க முடியும். வெளியில் இருந்து எவரும் வந்து, தட்டில் வைத்து “தீர்வு” தரப்போகிறார்களா, என்ன?

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles