வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு உறுப்பினரான மன்னா ரமேஷின், பிரதான உதவியாளர் ஒருவரின் வீட்டில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
யுக்திய சுற்றிவளைப்பு நடடிக்கையின்போது, மன்னா ரமேஷின் பிரதான உதவியாளரின் வீட்டை சோதனைக்குட்படுத்த பொலிஸார் சென்றுள்ளனர். தகவல் அறிந்து, வீட்டில் இருந்து குறித்த நபர் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து அவரின் வீட்டை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது 91 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 70 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் யுக்திய நடவடிக்கையின்போது நேற்று மாத்திரம் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
