மன்னாரில் சம்பவம் : குண்டு வைத்து தகர்க்கப்பட்ட நீர்த்தாங்கி : (VIDEO)

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர் தாங்கி இன்று திங்கட்கிழமை (15) காலை தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நீர் விநியோகத்திற்கென துறைமுகங்கள் அதிகார சபையினால் குறித்த நீர்த்தாங்கி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அமைக்கப்பட்ட பாரிய நீர் தாங்கியில் இருந்து எந்த ஒரு நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்து காணப்பட்டது. மேலும் குறித்த நீர்த்தாங்கியை சூழ்ந்து மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அச்சுறுத்தலாக காணப்படும் நீர்த்தாங்கியை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இராணுவத்திடம் உதவி கோரிய நிலையில் மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் உதவியுடன் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தை ஏற்படுத்தும் நீர்த்தாங்கியை குண்டு வைத்து தகர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Related Articles

Latest Articles