மரக்கறி வியாபாரி கேரள கஞ்சாவுடன் கைது!

பலாங்கொடை, வேலிஓயா பகுதியில் இருந்து பலாங்கொடை நகருக்கு வருகை தந்த பஸ்ஸை, பரிசோதனைசெய்த போது மரக்கறி வகைகளுக்குள் மறைத்து கேரள கஞ்சா கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மரக்கறி வியாபாரம் செய்பவர் எனவும், வேலிஓயா பிரதேசத்தில் இருந்து பலாங்கொடை நகருக்கு தொடர்ந்து மரக்கறி வியாபாரத்திற்காக வருவதாகவும், இவர் கொண்டுவந்து கத்தரிக்காய் உறைக்குள் கத்தரிக்காய் உடன் மறைத்து கொண்டுவந்த நிலையிலேயே கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒரு கிலோ 90 கிராம் கேரள கஞ்சாவை பலாங்கொடை காவற்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் நாளை, பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles