தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை – தெற்கு மடக்கும்புர பகுதியில் மரம் ஏற்றிச்சென்ற லொறியொன்று குடைசாய்ந்து இன்று மாலை விபத்துக்குள்ளானது.
குறித்த லொறியில் ஐவர் பயணித்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரின் கால் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கொத்மலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
மலையக இந்திய வீட்டுத் திட்டம் நாளை ஆரம்பமாகின்றது. எனவே, தெற்கு மடக்கும்புர பகுதியில் வீடமைப்பதற்காக அகற்றப்பட்ட மரங்கள், தொழிற்சாலை பகுதிக்கு எடுத்துச்செல்லப்படுகின்றது. இவ்வாறு மரங்களை ஏற்றி செல்லும் வழியிலேயே லொறி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தகவல் – நீலமேகம் பிரசாந்த்










