கொழும்பு, மருதானை ஜினானந்த மாவத்தையிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்டு வந்த விபசார விடுதியொன்றை
சுற்றி வளைத்த பொலிஸார், 6 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
இங்கு பெண்கள் 2 ஆயிரம் ரூபா முதல் 5 ஆயிரம் ரூபாவரை விற்பனை செய்யப்படுவதாகவும், அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட ஆறு பெண்களில் 21 வயதான யுவதியொருவரும் இருப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
வெல்லம்பிட்டிய, பசறை, கம்பளை மற்றும் வடுமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபசார விடுதியை நடத்தியதாகக் கூறப்படும் இரு ஆண்கள் லுனுகல மற்றும் கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கைதான எட்டு பேரையும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.










