மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல்- மேலும் 3 பேர் கைது!

ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ராகம வைத்திய பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 7 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (03) வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பெப்ரவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles