மறைந்த நல்லை ஆதீன முதல்வரின் புகழுடலுக்குப் பலரும் இன்று அஞ்சலி

இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் புகழுடலுக்குப் பலரும் நல்லை ஆதீனத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு இறையடி சேர்ந்தார்.

குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.

புகழுடலுக்கு மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்  பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இறுதிக்கிரியை நிகழ்வு இன்று மாலை  நல்லை ஆதீனத்தில்  நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles