மலேஷியாவில் இலங்கையருக்கு 10,000 வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இதற்கென மலேசிய மனித வள அமைச்சர் எம்.சரவணன் மற்றும் மலேசிய தொழிலாளர் நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட ராஜதந்திரிகள் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதோடு, பத்தாயிரம் வேலை வாய்ப்புகளுக்கான துறைகள், ஒப்பந்த காலஎல்லை, சம்பளம் உள்ளிட்ட விதிமுறைகள் குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாட்டிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகர் டான் யேங் தாய்யுடன் கடந்த 22 ஆம் திகதி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் நடைபெற்ற சந்திப்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினார். அமைச்சர் மலேசிய அரசிடம் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி
சம்பளம், ஒப்பந்த காலஎல்லை, விதிமுறைகள் குறித்தும் தீர்மானிக்கப்படும்விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் முகமாகவே பத்தாயிரம் வேலை வாய்ப்புகளை இலங்கையர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக உயர்ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இவ்வளவு காலமும் மலேசிய நாட்டின் வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளுக்கே கிடைத்து வந்திருந்தாலும் நான் கடந்த ஜூன் 23ஆம் திகதி Datuk Seri M.Saravanan க்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்ததற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு உயர்ஸ்தானிகருக்கு நன்றி தெரிவிக்கின்றேன் என அமைச்சர் கூறினார்.
மலேசிய வேலைவாய்ப்பு தொடர்பாக உத்தியோகபூர்வமாக இருதரப்பு ஒப்பந்தத்திற்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
2018 ஆம் ஆண்டு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சராக இருந்த வேளையில் தொழில் பயிற்சிக்காக மலேசியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தார்.
