பசறை – கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலை மலை துப்புரவு செய்துகொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் ஐவர் குளவிக்கொட்டுக்குக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் குளவிக்கொட்டு சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன. இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அண்மையில் உயிரிழப்பு சம்பவங்கள்கூட பதிவாகின.
எனினும், குளவிக்கூடுகளை அகற்றி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவில்லை என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்










