மலையக அரசியல்வாதிகள் ஓரணியில் திரளவேண்டும்!

மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி சமுகமாற்றத்தை நோக்கிப் பயணிப்பதற்கு கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் அனைத்து மலையக அரசியல்வாதிகளும், தொழிற்சங்கத் தலைவர்களும் ஓரணியில் திரளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வித நிபந்தனைகளும் இன்றி ‘மக்களின் நலன்’ என்ற ஒரு விடயத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு இணைந்து பயணிக்கும் முடிவை கூடியவிரைவில் எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் வேலாயுதம் தினேஷ்குமார், இளைஞர், யுவதிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்டோரையும் சந்தித்து, அடுத்தக்கட்ட திட்டங்கள் சம்பந்தமாக விபரித்துவருகின்றார்.
இவ்வாறு நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மலையகத்தில் மாற்றம் வேண்டும் என்ற கோஷம் ஆரம்பம் காலம்தொட்டு எழுப்பட்டுவந்தாலும் அந்த இலக்கை நோக்கி இன்னும் பயணிக்கமுடியாதுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக எமது சமுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மையும் இதில் பிரதான காரணியாகும்.

ஒரு தரப்பு எதையாவது செய்தால் மறுதரப்பு காலை வாருவரும், விமர்சனங்களை முன்வைப்பதுமாகவே எமது அரசியல் கலாச்சாரம் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலைமை மாறவேண்டும். அதனை மாற்றியமைப்பதற்காகவே அரசியலில் இறங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் வந்தது. எல்லாம் இணைந்து மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே எனது தந்தையின் எதிர்ப்பார்ப்பாகவும் இருந்தது.

‘ஒற்றுமை’ என்ற ஆயுதம் பலம்பொருந்தியது. ஓரணியில் இருந்தால் எதனையும் சாதிக்கமுடியும். ஒரு கையில் ஓசை எழுப்புவதைவிடவும் இரு கரங்களும் இணைந்தால் பலமாக சத்தம் வரும்.  குறிப்பாக சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலின்போது மலையக தலைவர்கள் அன்று இணைந்து செயற்பட்டனர். இதனால் இரண்டு பிரதிநிதிகளை சபைக்கு அனுப்பக்கூடியதாக இருந்தது.

இவ்வாறு இணைந்து செயற்பட்ட சந்தர்ப்பங்களிளெல்லாம் எமக்கு வெற்றியே கிடைத்துள்ளது.

மலையகத்தில் மாற்றம், சமுக விடுதலை, மக்களின் வாழ்வாதார மேம்பாடு, உரிமைகள் உட்பட மேலும் பல விடயங்களில் கட்சிகளின் நிலைப்பாடுகள் ஒருமித்ததாகவே காணப்படுகின்றன. எனவே, அவற்றை அடைவதற்கு இணைந்து செயற்பட்டால் , மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பேரம் பேசும் ஆற்றலும் உயரும். இது தொடர்பான கருத்தாடலை மலையக புத்திஜீவிகளும், சமுக செயற்பாட்டாளர்களும் ஆரம்பிக்கவேண்டும். ” என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles