மலையக இலக்கியத்தை மட்டுமல்ல வாழ்வியலையும் ஆழமாக புரிந்து கொண்டவர்….சென்று வாருங்கள் பேராசானே…!

அமரத்துவம் அடைந்த பேராசிரியர் செ.யோகராஜா கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையிலிருந்து ஒய்வுபெற்றவர். மலையகத்தையும் மலையக இலக்கியத்தையும் மட்டுமன்றி மலையக வாழ்வியலையும் ஆழமாக புரிந்து கொண்டவர்.

2001ஆம் ஆண்டு போர்கால சூழலில் கிழக்கு பல்கலைகழக நுண்கலைதுறை நடாத்திய உலக நாடக விழாவில் பங்குபற்றிய மலையகத்தின் கலை பண்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்த புதிய பண்பாட்டு அமைப்பின் குழுவினரை வரவேற்று உபசரிப்பதில் முன்னின்றவர்.

அப்பயணத்திற்கு வழிகோளிய மணிசேகரன், தியாகசேகரன் , சி.ஜெய்சங்கர், பேரா.சி.மௌனகுரு ஆகியயோருடன் ஒருவராக இணைந்து பணியாற்றினார்.

மலையகம் பற்றிய ஆழமான கருத்து பகிர்வுகளுடன் புரிதலை கிழக்க்கு பல்கலைக்கழக சமூகத்துடன் ஏற்படுத்த முயன்றார். சிறந்த ஆய்வறிஞராக வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

பதிவு – Ponnusamy Prabakaran

Related Articles

Latest Articles