தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கு, மலையக ஜனாதிபதி வேட்பாளர் எம். திலகராஜா பகிரங்க சவால் விடுத்துள்ளார். இது தொடர்பான அவரது முகநூல் பதிவு வருமாறு,
‘நான் இலங்கை மலையகத் தமிழன்” உடப்பூரில் வாழும் மக்கள் இந்திய வம்சாவளியினர். எனது கொள்கை அறிக்கை இரண்டையும் ஏற்கும் வகையில் எனது கொள்கை அறிக்கையில் முன்மொழிவு செய்துள்ளேன்.
ஆனால் தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்று வெளியிடும்
‘மலையக சாசனம்” எனும் பத்திரத்தில் குறிப்பிடப்படும் “ இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் இலங்கையர்” எனும் தேசிய அடையாள முன்மொழிவு க்கு எதிராக சவால விடுகிறேன் .
எனது சவாலை ஏற்று அதன் தலைவர்கள் மூவருடன் தனியனாக பொது மேடை விவாதத்துக்கு நான் தயார் என இந்தப் பதிவில் பகிரங்கமாக அழைக்கிறேன். அந்த தலைவர்களுக்கு உதவ அவர்களது ஆலோசகர்கள் சேர்ந்து அமர்ந்தால் ஆட்சேபனை இல்லை. அப்போதும். நான் தனியாக தயார்.
நிபந்தனைகள்.
1. திகதியையும். இடத்தையும் அவர்களே தீர்மானிக்கலாம் ( செப் 21 க்கு பிறகு )
2. விவாதத்தின் போது நான் யாரையும். ஒருமையில் பேச மாட்டேன். என்னை யாராவது அப்படி விளித்தால் அந்த நொடியில் விவாத மேடையில் இருந்து இறங்கி விடுவேன்.
3. தலைப்பு மேலே இன அடையாளம் குறித்து மாத்திரமே
4. மேசையில் வைக்கப்படும் தண்ணீர் பிளாஸ்டிக் கப்பில் இருக்க வேண்டும்.