மலையக தமிழர்கள் தொடர்பில் இந்திய அரசு முழுமையான அக்கறை – சம்பந்தன் வரவேற்பு

“இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனில் இந்திய மத்திய அரசு முழுமையான அக்கறை செலுத்தியுள்ளது. உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதனை நாம் வரவேற்கின்றோம். அதேபோல், இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு விரைந்து கிடைக்க நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

‘மலையகம் – 200’ நிகழ்வில் பங்கேற்க கொழும்பு வந்த இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வடக்கு – கிழக்குக்கும் வந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ள நிலையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் தீர்வு விவகாரத்தில் ராஜபக்ஷ அரசு போல் ரணில் அரசும் வாக்குறுதிகளை மாத்திரம் வழங்குகின்றது. ஆனால், செயல் வடிவில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும்.

தமிழர்களின் கோரிக்கைகள் என்ன, அவர்கள் விரும்பம் தீர்வு என்ன ஆகிய விடயங்களை இந்தியாவின் மோடி அரசிடம் நாம் ஏற்கனவே எடுத்துரைத்து விட்டோம். எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் மோடி அரசு, இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles