மலையக தியாகிகள் தினத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும்!

“ இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் மலையக தொழிற்சங்க தியாகிகள் தினத்தை முன்மொழிந்து வழிமொழிந்த இந்த நாள் மிகவும் முக்கியமான, அதே நேரத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த இன்னும் ஒரு வெற்றியாகவே கருதுகின்றேன். இதனை நடைமுறைபடுத்த அரசாங்கம் நடலடிக்கை எடுத்து இந்த நாட்டில் எங்களுடைய மக்களுக்கான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .”

இவ்வாறு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலுமு; கூறியவை வருமாறு,

“தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனவரி மாதம் 10 ஆம் திகதியை மலையக தொழிற்சங்க தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற விடயத்தை பாராளுமன்றத்தில் முன்மொழிந்து ஒரு பிரேரணையாக முன்வைத்தார்.

அதனை நான் எங்களுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக வழி மொழிந்து உரையாற்றினேன், உண்மையில் இந்த நாள் எனது பாராளுமன்ற வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று .
இதனை அங்கீகரித்து எங்களுடைய மக்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

இலங்கை தொழிற்சங்க வரலாற்றில் எங்களுடைய மலையக மக்கள் தங்களுடைய உயிரை பல கட்டங்களிலும் தியாகம் செய்திருக்கின்றார்கள். அதனுடைய வரலாறு மிகவும் பழமையானது. அவர்கள் செய்த உயிர் தியாகங்களின் அடிப்படையிலேயே நாம் பல வெற்றிகளை அகிம்சை வழியில் போராடி பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.

இலங்கையில் தொழிற்சங்க வரலாற்றில் சுமார் 34 பேர் மலையக தியாகிகளாக குறிப்பிடப்படுகின்றார்கள். குறிப்பாக தனியே தமிழர்கள் மாத்திரம் அல்லாது இந்த தியாகிகள் பட்டியலில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிங்கள சகோதரர்களும் இருக்கின்றார்கள்.

எனவே எங்களுடைய போராட்டமானது அன்று முதல் இன்று வரை இலங்கையர்களாகவே போராடியிருக்கின்ளோம். இதனை அரசாங்கம் அங்கீகரித்து எங்களுடைய மக்களுக்கான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

இந்த பிரேரணையை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மலையக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நபர் என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக அமைவது பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தலைமையிலான எங்களுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி என்று சொன்னால் அது மிகையாகாது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles