மலையக மக்களுக்காகவும் எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் – மாத்தளையில் சாணக்கியன் முழக்கம் (Video)

” மலையக மக்களுக்காக 1949 இல் இருந்தே இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி குரல் கொடுத்து வந்துள்ளது. ஆயிரம் ரூபா பிரச்சினையைக்கூட நாமே சர்வதேச மயப்படுத்தினோம். எனவே, மலையக மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று (05.03.2022) மாத்தளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சாணக்கியன் எம்.பி. இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாத்தளை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தும், தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இந்நிலைமை மாறவேண்டும். முற்போக்கான சிங்கள சகோதரர்களையும் இணைத்துக்கொண்டு இலக்கை நோக்கி நாம் நகர வேண்டும்.

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு எமது கட்சி அன்று கடும் எதிர்ப்பை வெளியிட்டது. அதனால்தான் தமிழரசுக்கட்சிகூட தோற்றம் பெற்றது. எனவே, இப்பகுதிகளில் நாம் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும்கூட, மலையக மக்களுக்காக குரல் கொடுத்து வந்துள்ளோம். ஆயிரம் ரூபா பிரச்சினையைக்கூட சர்வதேச மயப்படுத்தினோம்.

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று இந்த ஆயிரம் ரூபா சம்பள விவகாரம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 1000 ரூபா போதாது. 2000 ரூபா வழங்கப்பட்டாலும் சமாளிக்க முடியாத வகையிலேயே நாட்டில் விலைவாசி உள்ளது. – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles