தமிழ் முற்போக்கு கூட்டணியின் மும்மூர்த்திகளும் பிரிந்து இன்று நாசமா போகின்ற அரசியலையே முன்னெடுக்கின்றனர் என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பேரிடரில் மலையகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை வடக்கில் குடியேற்றுமாறும், காணிகள் தருவதாகவும் வடக்கிலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் உறவுகள் என்னிடமும் தெரிவித்துள்ளனர்.
எனினும், இது சாத்தியதா, இல்லையா என்பது பற்றி ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும். இதற்கு காலம் அவசியம்.
இந்நிலையில் கண்டிக்கு சென்று மலையக மக்களை வடக்கில் குடியேற்றுவது பற்றி மனோ கணேசன் கதைக்கின்றார். ஆனால் மலையக மக்களுக்கு மலையகத்தில்தான் காணி வேண்டும், யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை என ராதாகிருஸ்ணன் குறிப்பிடுகின்றார்.
அதாவது தமிழ் முற்போக்கு கூட்டணியின் மும்மூர்த்திகளும் பிரிந்து இன்று நாசமா போகின்ற அரசியலையே முன்னெடுக்கின்றனர்.
தயவுசெய்து, மக்களுக்கு சித்து விளையாட்டு காட்ட வேண்டாம்.
மலையக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இதனை நாம் செய்வோம். இந்த விடயத்தில் அரசியல் நடத்த வேண்டாம்.










