மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் வேலைத்திட்டத்தை உறுதிசெய்க!

அரசியல் கலாச்சாரத்தின் மீது மக்கள் கொண்ட வெறுப்பு மற்றும் நாட்டின் ஸ்தீரதன்மையை நோக்காக கொண்ட அடிப்படை எதிர்பார்ப்பின் அலை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதி செய்தது. எனினும், இவ் அரசாங்கத்திற்கு எம்மக்கள் மீது பாரிய பொறுப்பும் அதேபோன்று நாடு முழுவதும் உள்ள மக்களின் ஏகோபித்த பாரிய எதிர்பார்ப்பும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு உள்ளது.

இந்நிலையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையும் அரசியல் தலைமைகளின் குறைகளையும் சுட்டிக்காட்டிக் கொண்டு காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் பாரத் அருள்சாமி தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கிடையிலேயான ஒப்பந்தத்திற்கு இணக்கப்பாடு வந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட நிதி உதவி நிறைவு செய்யப்பட்டு நான்காம் கட்ட நிதி உதவிக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது நாட்டின் பொருளாதார ஸ்தீரதன்மைக்கு ஏதுவாக அமையகூடிய காரணியாகும். எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாத இடையிலான காலப்பகுதி இவ் அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான காலப்பகுதியாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் உறுதியளித்த அனைத்து விடயங்களையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள் அரசியலமைப்பின் மாற்றங்கள் போன்ற நாட்டின் நிர்வாக கட்டமைப்புகளிலும் பல மாற்றங்கள் ஏற்படவுள்ள நிலையில் இக்காலப்பகுதியில் வழமையான நொண்டி சாக்குகளை சொல்லாமல் அரசாங்கம் செயல்படும் என நான் நினைக்கின்றேன்.

அதேபோன்று மலையக மக்கள் இவ் அரசாங்கத்தின் மீது பாரிய எதிர்பார்ப்பினை முன்வைத்து தனது வாக்குகளை அளித்துள்ளார்கள். மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்தல், அவர்களுக்கான கல்வி அபிவிருத்தி, காணி உரிமை என்பன அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட வேண்டும்.

அதற்கான தொடர் அழுத்தங்களை நாம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து வழங்குவோம். அதேவேளையில், கண்டி மாவட்டத்தில் இம்முறை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆளும் தேசிய மக்கள் சக்தியிலோ அல்லது எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலோ துரிதிஷ்ட வசமாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவில்லை.

கடந்த காலங்களில் மக்கள் தெரிவு செய்த உறுப்பினர்கள் தனது சுயலாப அரசியலுக்காக மக்கள் வென்றெடுத்த உறுப்புரிமையை பகடயாக பயன்படுத்தியமை காரணமாக மக்கள் அவர்களை முற்றாக நிராகரித்தனர்.

இருப்பினும், நாடு அநுர அலையை நோக்கி செல்லும் போது கண்டி மாவட்டத்திலும் 5 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்ற போதிலும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக என்மீது நம்பிக்கை வைத்து 18890 வாக்குகளை எனக்கு அளித்தமை மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையும் அவர்களின் பிரதிநிதியாக எமது அரசியல் பலத்தை பயன்படுத்தி தொடர்ந்து செயல்படுவோம் என்ற உறுதியையும் பறைசாற்றுகின்றது.

2020ம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின்னடைவுக்கு பின்னரும் நாம் மக்களுக்கான உரிமை அரசியலையும் எம்மாளான அபிவிருத்தி திட்டங்களையும் அப்போது இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விட அதிகமாக வழங்கியிருந்தோம் என்பதை எமக்கு கிடைத்த வாக்குகள் உறுதி செய்கின்றது.
எனவே, தொடர்ந்தும் மக்களின் குரலாய் அவர்களின் உரிமைசார் அரசியலையும், அடுத்த கட்ட தலைமுறை அரசியல் தலைமைகளை உருவாக்குவதையும் நான் முன்னின்று செயல்படுவேன் என்பதை கண்டி வாழ் தமிழ் மக்களுக்கு நான் உறுதியளிக்கின்றேன்.

எதிர்வரும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் யுவதிகள், சமூக செயற்பாடுகளில் ஈடுப்படும் அரசியல் அனுபவமிக்கவர்கள் போன்றவர்களை அரசியல் களத்தில் உருவாக்கி அவர்களை இரண்டாம் கட்ட தலைவர்களாக கொண்டு வருவதற்கு எமது தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ந்தும் செயல்படும் என்றார்.

(க.கிஷாந்தன்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles