மலையகத்தின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் அசானிக்கு வேலுகுமார் எம்.பி. வாழ்த்து

” மலையக மக்களின் வலி சுமந்த வாழ்வு குறித்தும், அவர்களுக்கான விடுதலையின் அவசியத்துவம் தொடர்பிலும் முழு உலகுக்கும் தனது குரல்வளத்தால் எடுத்துரைத்துக்கொண்டிருக்கும் மலையக மண்ணின் புதல்வி அசானி, Zee தமிழ் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் போட்டிக்கு உத்தியோகப்பூர்வமாக தெரிவாகியுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. ” என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

” எமது மலையக சமூகத்தின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த மலை மகளுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தான் துன்ப மேகங்களை சுமந்துகொண்டுசென்று, தன் சமூகத்துக்காக விடிவு மழை பொழிவதற்காக சர்வதேச தளத்தில் ‘இசை’யால் புரட்சி செய்துகொண்டிருக்கும் அசானி, இசை உலகில் உச்சம் தொட வேண்டும் என்பதே எம் அனைவரினதும் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பாகும்.

சமூகமாற்றத்துக்காக – விடிவுக்காக கலைமூலமும் புரட்சிசெய்யலாம் என்பதற்காக அசானியின் குரலும் ஓர் சான்று. அசானியை கொண்டாடுவோம். அவரினதும், சமூகத்தினதும் வெற்றிக்காக, விடிவுக்காக ஒன்றிணைவோம்.” – எனவும் வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles