மலையகத்தில் களமிறங்குகிறார் மஹிந்த!

நாவலப்பிட்டியில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தலைமையில், ஒன்றாக எழுவோம் எனும் தொனிப்பொருளின்கீழ் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவினால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மே 9 ஆம் திகதிக்கு பிறகு மொட்டு கட்சி ஏற்பாடு செய்த முதலாவது கூட்டம் கடந்த வாரம் களுத்துறையில் நடைபெற்றது. இந்நிலையில் 2 ஆவது கூட்டம் மலையகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான நாவலப்பிட்டியவில் இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles