” வடக்கிலும், தெற்கிலும், மலையகத்திலும் சாதிப்பிரச்சினையும் உள்ளது. அப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர். எனவே, இப்பிரச்சினை குறித்து கவனம் செலுத்தி அதற்கும் முடிவு கட்ட வேண்டும். ” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிப்” தேசிய ஒருமைப்பாடு குறித்து கவனம் செலுத்தும் அதேவேளை இந்த சமூகத்தில் காணப்படும் சாதி பிரச்சினை பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் இப்பிரச்சினை காணப்படுகின்றது. சாதி பாகுபாட்டால் பாதிக்கப்படுபவர்கள் தொர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். தேர்தல் காலங்களிலும் சாதி ரீதியான பிரச்சாரம் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகின்றது. இதில் ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை. சாதி பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் இருக்கின்றனர். இப்படியான பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும்.” – என்றார்.










