மலையகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் இன்ஜெஸ்ட்ரி, போடைஸ், சென்கூம்ஸ் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 1500 தொழிலாளர் குடும்பங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளனர்.
இவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கு முன் வர வேண்டும்.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட தோட்டங்களுக்குரிய தோட்ட கம்பெனிகளும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு முன் வர வேண்டும் .










