மலையகத்தில் மக்கள் எழுச்சி போராட்டம் வெடிக்கும் – ராஜாராம் சூளுரை

” தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் தொடரும் பட்சத்தில் மலையகத்தில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் வெடிக்கும். நாம் கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரானவர்கள் அல்லர். கூத்து ஒப்பந்தத்தையே எதிர்க்கின்றோம். எனவே, தொழிலாளர்களுக்கு நன்மை பயக்ககூடியவகையில் கூட்டு ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான ராஜாராம் வலியுறுத்தினார்.

நுவரெலியாவில் இன்று (09.01.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தற்போது மூன்று தடவைகள் கொழுந்து நிறை அளவிடப்படுகின்றது. இதன்போது ஒரு தடவைக்கு 5 கிலோ கழிக்கப்படுகின்றது. அதாவது தொழிலாளர்கள் 10 கிலோ பறித்திருந்தால் 5 கிலோதான் அவர்களின் கணக்கில் இடப்படும். ஒரு தடவைக்கு 5 கிலோ என்ற அடிப்படையில் நாளொன்றில் 15 கிலோ கொழுந்து கழிக்கப்படுகின்றது.

தோட்ட நிர்வாகம் இலாபம் உழைப்பதற்காகவே தொழிலாளர்களின் இரத்தம் இவ்வாறு உறிஞ்சப்படுகின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்நிலைமையை இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியாது. தொழிலாளர்களை வஞ்சிக்கும், சுரண்டும் நடவடிக்கைகளை நிர்வவாகங்கள் கைவிட வேண்டும். அவ்வாறு இல்லாமல் அந்நிலைமை தொடர்ந்தால் மலையக தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். அது மக்கள் எழுச்சி போராட்டமாகவும் மாறும்.

கூட்டு ஒப்பந்தமானது கூத்து ஒப்பந்தமாகக்கூடாது என்பதே எமது கருத்து. கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள தான்னோன்றித்தனம் இல்லாமல் ஆக்கப்பட்டு, அது தொழிலாளர்களுக்கு ஏற்புடையதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களை கருத்திக்கொண்டு அது மக்கள் சார்பானதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இதுவரை அமுலில் இருந்த கூட்டு ஒப்பந்தம் நியாயமானதாக இருந்ததா? வெளிப்படைதன்மை இருக்கவில்லை, அதனால்தான் எதிர்த்தோம்.

அதேவேளை, சுசில் பிரேமஜயந்த தொடர்பில் தகவல் திரட்டிய புலனாய்வு பிரிவினருக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏன் உரிய வகையில் செயற்படமுடியாமல் உள்ளது, பொறுப்புகூற வேண்டியவர்கள் யார்? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது கோமா நிலையில் இருந்தனரா?” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles