மலையகம் 200 பன்னாட்டு மாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி தமிழகம் கோவையில் நடைபெறவுள்ளது.
பீட்டர் டேமியன் அரங்கத்தில் காலை 9.30 மணிமுதல் மாலை 08.30 மணிவரை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
மலையக, தாயகம் திரும்பிய தமிழர்களுக்கான இயக்கத்தாலேயே இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இலங்கையில் இருந்தும் மலையக சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இம்மாநாட்டில் மலையகத் தமிழர்களுக்கான கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. மாநாட்டு மலரும் வெளியிடப்படவுள்ளது.










