நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக , பிரதான வீதிகளில் நீர் வழிந்தோடக்கூடிய முறையான வடிகாண் அமைப்புகள் அமைக்கப்படாமையின் காரணமாக வாகன சாரதிகள் மாத்திரமின்றி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் கொட்டக்கலை மற்றும் ஹட்டன் நகரங்களில் இந்நிலைமை மோசமாக உள்ளது. தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக வீதி எங்கும் நீர் வழிந்தோடி செல்வதனால் பாதசாரிகள் குறித்த வீதியில் பயணிப்பதை பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகிய நிறுவனங்களின் பிரதானிகள் உரிய நடவடிக்கைகளை துரிதக் கதியில் முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் வேண்டுகோள் விடுகின்றனர்..
அது மாத்திரமல்ல ஹட்டன் நகரில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் பாரிய குறிகள் காணப்படுவதால் அங்கும் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பயணிகள் மட்டுமல்லாது வாகனங்களும் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றன . கடந்த பல மாத காலமாகவே குறித்த பிரதேசத்தில் காணப்படும் குழிகளை மூடுவதற்கு அல்லது அங்குள்ள வீதிகளை புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நிருபர் – கௌசி
