மஸ்கெலியா நகரில் 3 நாட்கள் வெசாக் பௌர்ணமி வலயம்: நாளை ஆரம்பம்

மஸ்கெலியா நகரில் 3 நாட்கள் வெசாக் பௌர்ணமி வலயம்: நாளை ஆரம்பம்

மஸ்கெலியா நகரில் மூன்று நாட்களைக் கொண்ட ‘வெசாக் பௌர்ணமி வலயம்’ நாளை (29) முதல் ஆரம்பமாகவுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மஸ்கெலியா பிரதேச சபையும், மஸ்கெலியா வர்த்தக சங்கமும் இணைந்து இந்த வெசாக் வலயத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

வெசாக் கூடுகள் போட்டி

நாளை காலை 11:55 மணிக்கு மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தில் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதில் சிறந்த முறையில் வெசாக் கூடுகளை அமைக்கும் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி:

முதலாம் இடம்: 10,000 ரூபாய்

இரண்டாம் இடம்: 7,500 ரூபாய்

மூன்றாம் இடம்: 5,000 ரூபாய்

அன்னதானம் (தன்சல்) வழங்கல்

நாளை (29ஆம் திகதி) மதியம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்பாக அன்னதானம் (தன்சல்) வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மஸ்கெலியா வர்த்தக சங்கமும் பிரதேச சபையும் இணைந்தே இந்த அன்னதான நிகழ்வை நடத்தவுள்ளன.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles