மஸ்கெலியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு 30ஆம் திகதிவரை பூட்டு!

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று மாலை 4 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என்று பிரதேச சபையின் தவிசாளர் செண்பகவள்ளி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

” மஸ்கெலியா கங்கேவத்த பகுதியில் பேலியகொடை மீன்சந்தையோடு தொடர்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது மனைவிக்கும் இன்று (27) வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

எனவே சமூகப்பரவல் தடுக்கும் நோக்கத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா நகரம் மற்றும் சாமிமலை உள்ளிட்ட நகரங்கள் 27/10/2020 இன்று மாலை 4 மணிமுதல் 30ம் திகதிவரை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் நகரம் தொற்றுநீக்கம் செய்யப்படவுள்ளது.

நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles