மஸ்கெலியா பகுதிகளில் வாழும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகவிருந்த ‘சதொச விற்பனை நிலையம்’ என்ற கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நகரில் சதொச விற்பனை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.
சர்வமத தலைவர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கோவிந்தன் செம்பகவள்ளி, சதொச நிருவன தலைவர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள், நிருபர் கௌசல்யா