மஸ்கெலியா பிரதான வீதியில் ரொக்கூட் பகுதியிலுள்ள பாரிய வாகை மரத்தில் 11 குளவி கூடுகள் காணப்படுகின்றன.
மலைநாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை மற்றும் கடும் காற்றால் மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தாலோ அல்லது கிளைக்கு கிளை மோதுண்டாலோ குளவி கூடு கலையும் அபாயம் உள்ளது.
தொழிலாளர்கள் தேயிலை மலையில் வேலைசெய்யும்போது இவ்வாறு நடைபெற்றால் அவர்களை குளவிகள் கொட்டக்கூடும். அவ்வீதியூடாக செல்பவர்களுக்கும் ஆபத்து காணப்படுகின்றது.
ஆகையால் சம்பந்தப்பட்ட நல்லதண்ணி வனத்துறையினர் இந்த குளவி கூடுகளை அகற்ற முன்வருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். முக்கியமாக இவ்விடத்தில் அதிகளவு மக்கள் பேருந்திற்காக காத்து நிற்பதும் காணக்கூடியதாக உள்ளது.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்