மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் இதுவரை 255 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இன்று தெரிவித்தார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள். சம்பவத்தின்போது சிறையில் இருந்த கைதிகள் , சிறைச்சாலை அதிகாரிகள் பேர் உட்பட மேலும் சிலரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நேற்று மாத்திரம் 27 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.










