2021 முற்பகுதியில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில், மத்திய மாகாணத்தில் ராஜரட்னம் ஜனார்த் (ஜனா) போட்டியிடவுள்ளார் என தெரியவருகின்றது.
இதற்காகவே ஐக்கிய தேசியக்கட்சியை கைவிட்டு அண்மையில் அவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் கடந்தவாரம் இணைந்தார் எனவும் அறியமுடிகின்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜரட்னத்தின் மகனான ஜனார்த் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி பட்டியலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையிலேயே மாகாணசபைத் தேர்தலை அவர் குறிவைத்து, அரசியல் ‘பல்டி’ அடித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
