மாகாணசபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அரச உயர்மட்ட தலைவர்களால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணசபை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இதன்படி ஒக்டோபர் மாதத்துக்கு முன்னர் 9 மாகாணசபைகளுக்கும் தேர்தலை நடத்துவதே அரசின் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.
இந்நிலையில் ஆளுங்கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கும், அரச உயர் மட்ட பிரமுகர்களுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போதே தேர்தலுக்கு தயாராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்புக்கு முன்னர் ஆளுங்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களையும் உயர்மட்ட தலைவர்கள் சந்தித்து, கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி. என்பனவும் தேர்தலை சந்திப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளன. வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் விண்ணப்பங்களைக்கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.