தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவரும், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பா. சிவநேசன், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளாரென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மத்திய மாகாணசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அவர் களமிறங்கவுள்ளார் எனவும், இதற்கு சங்கத்தின் தலைமைப்பீடம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் நம்பிக்கைக்குரிய நபராக விளங்கும் சிவநேசன், நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.காவின் செல்வாக்கு கோலோச்சியிருந்த காலப்பகுதியில், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் திகாவுடன் இணைந்து சங்கப்பணிகளை முன்னெடுத்தவர் என இளைஞர் அணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் சோ. ஶ்ரீதரன், ராம் உள்ளிட்டவர்களும் போட்டியிடவுள்ளனர்.
2022 முற்பகுதியில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில், தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன தமிழ் முற்போக்கு கூட்டணியாகவே களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.










