“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, மாகாண சபைத் தேர்தலைக் காலதாமதமின்றி மிகவும் விரைவாக நடத்த வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.
“மாகாண சபைத் தேர்தலுக்கு அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிறைவடைந்த பின், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னதாக மாகாண சபைகளை முழு அதிகாரத்துடன் இயங்கச் செய்வது முக்கியமானதாகும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.










