மாகாணசபைத் தேர்தலை விரைவில் பெறுவதற்குரிய எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் உக்கிரமாக முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
‘தேசிய இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாகவே மாகாணசபைத் தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டது. உயிர் தியாகங்களுக்கு மத்தியிலேயே இம்முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, மாகாண சபை முறைமை அவசியம்.
மாகாணசபைத் தேர்தல் பற்றி எதிரணிகள் கதைக்கின்றனவா என கேள்வி எழுப்படுகின்றது. இது பற்றி நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறோம். மாகாணசபைகளின் கீழ் நிறைய பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளன. அம்முறைமையில் ஜனாதிபதியின் ஏதேச்சாதிகாரம் இருப்பதை அனுமதிக்க முடியாது. ஆகவே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும்.
மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் வென்றெடுப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும். இதற்காக ஜனநாயக வழியில் எல்லா வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” – எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.