மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.










