மாணவனுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

ஹொரண, கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை, ஆசிரியை ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

மாணவனின் வீட்டுக்குச் சென்ற இவ்வாசிரியை, அவனை முத்தமிட்டதுடன் பாலியல் தொந்தரவும் செய்துள்ளார்.

இவரைக் கைது செய்த பொலிஸார், ஹொரண நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதையடுத்து இம்மாதம் ஆறாம் திகதி வரை ஆசிரியையை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் மாஜிஸ்டிரேட் நளின் இம்புலகொட உத்தரவிட்டுள்ளார். மாணவனின் வகுப்பாசிரியையே இச்செயலைச் செய்துள்ளார்.

இவர், 42 வயதுடைய 03 பிள்ளைகளின் தாயாராவார். பாதிப்புக்குள்ளான மாணவனின் பெற்றோர்கள் வெளிநாட்டில் உள்ளதாகவும் தாயின் சகோதரியிடமே மாணவர் வளர்ந்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஐந்தாம் திகதி மாணவனின் சிறிய தாயார் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த வேளையில் சந்தேக நபரான ஆசிரியை மாணவனை தேடி வீட்டுக்கு வந்ததாகவும் அச்சந்தர்ப்பத்தில் மாணவன் மாத்திரமே வீட்டிலிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles