அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடகம பகுதியில் சிலர் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பசறை பொலிஸார், மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவரை இன்று மாலை கைது செய்துள்ளனர்.
33 மற்றும் 39 வயதுகளுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவருக்கும் எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா










