மாத்தளை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்வச பஞ்சரத பவனி நாளை (17) நடைபெறவுள்ளது.
முற்பகல் 11 மணியளவில் சுவாமிகள் பஞ்ச ரதங்களில் பிரதிட்சை செய்யப்படுவார்கள். அதன்பின்னர் மாலை 6.30 மணிவரை தேரில் ஆரோகணித்திருக்கும் சுவாமிகளுக்கு அர்ச்சனைகள் இட்பெறும்.
இதன்போது ஒரே நேரத்தில் 100 அடியார்கள் மட்டுமே உள்வாங்கப்படுவார்கள். மூன்று கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அது உரிய வகையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
6.30 மணியளவில் ஆலயத்தில் இருந்து புறப்படும் பஞ்சரத பவனி, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு முன் பதாக ஆலயத்தை வந்தடையும். இடையில் ஶ்ரீ முத்துவிநாயகல் ஆலயம், ஶ்ரீகதிரேசன் ஆலயம் ஆகியவற்றைத்தவிர வேறு எங்கும் அர்ச்சனைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
