மாத்தளையில் 5பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண் சரிவு எச்சரிக்கை

மாத்தளை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மாத்தளை, உக்குவள, இரத்தோட்டை, பல்லேபோல, அம்பன்கங்ககோறல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் மழையினால் இரத்தோட்டை ரிவஸ்ட்ரன் வீதி கம்மடுவ பண்டாரபொல மற்றும் பல பிரதான வீதிகளில் மண்மேடுகள் வீழ்ந்துள்ளன.

போக்குவரத்துக்கு இவை,தடையாக உள்ளதால் இவற்றை அகற்றும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

மண் சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இம்மாவட்டத்தில் 33 குடும்பங்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேற்படி காரியாலயத்தின் பிரதிப் பணிப்பாளர் சமந்த அமர வீர தெரிவித்தார். அரச சேவைகளை மக்களுக்கு கிராமங்கள் தோறும் எடுத்துச் செல்லும் வேலை திட்டத்தின் கீழ், உக்குவளை பிரதேச செயலாளரினால் நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles